4 தொழிலாளர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

சிவகாசி அருகே வெடி விபத்தில் இறந்த 4 தொழிலாளர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
4 தொழிலாளர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
Published on

சிவகாசி.

சிவகாசி அருகே வெடி விபத்தில் இறந்த 4 தொழிலாளர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வெடி விபத்து

சிவகாசி அருகே உள்ள களத்தூர் நாகலாபுரத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலியாகினர்.

வெடிவிபத்தில் இறந்தவர்களின் உடல்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்டத்தில் உள்ள நத்தம்பட்டி போலீசார் அதற்கான நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் பிரேத பரிசோதனை மாலை 3 மணி வரை தொடங்கப்படாமல் இருந்தது. பின்னர் 4 மணி அளவில் பிரேத பரிசாதனை தொடங்கியது.

கதறல்

வெடி விபத்தில் இறந்த 4 பேரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் அங்கு கதறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. காலை 11 மணிக்கு அனைவரின் உடல்களும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டதால் இறந்தவர்களின் உறவினர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதிக அளவில் கூட்டம் கூடியதால் சிவகாசி டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

பிரேத பரிசோதனை மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து 4 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com