

நெல்லை மாநகரம், பாளையங்கோட்டை, பாதாள மாடன் கோவில் தெருவை சேர்ந்த பிரான்சிஸ் மகன் நல்லகண்ணு(எ) கார்த்திக் (வயது 39) என்பவர் கொக்கிரகுளம் பகுதியில் ஒரு தனியார் மஹால் அருகே நடந்து சென்றார்.
அப்போது அவரை திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிவசக்தி(24), கொக்கிரகுளம், கவி கம்பர் தெருவை சேர்ந்த அழகுவேல் கண்ணன் மகன் அருணாச்சலம்(20), கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்த சிவன் கோவில் தெருவை சேர்ந்த நெல்லையப்பன் மகன் முகேஷ்(19) மற்றும் சிவசுப்பு ஆகிய 4 பேர் சேர்ந்து வழிமறித்து அரிவாளைக் காட்டி மிரட்டி ரூ.1,000-ஐ பறித்து சென்றனர்.
இதுகுறித்து நலலகண்ணு கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பாளையங்கோட்டை காவல்துறையினர் அருணாச்சலம், முகேஷ் ஆகியோரை கைது நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இதனை தொடர்ந்து சிவசக்தி என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.