

மைசூரு,
மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகா ஒம்பாலே கொப்பலு கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 39). சிவில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் அதே தாலுகா அஞ்சட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்த அமுல்யா (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அமுல்யா, மைசூருவில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வந்தார்.
இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. லோகேசுக்கு ஏற்கனவே திருமணமாகியது தெரிந்தும் அமுல்யா, அவரை காதலித்து வந்துள்ளார். அவர்கள் 2 பேரும் மைசூருவில் அடிக்கடி ஜோடியாக சுற்றி வந்துள்ளனர். மேலும் அவர்கள் 2 பேரும் தனியார் தங்கும் விடுதியில் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், மனைவியை கைவிட்டு தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அமுல்யா, லோகேசை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அதற்கு லோகேஷ் மறுத்து வந்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் லோகேசும், அமுல்யாவும் மைசூரு ஹெப்பாள் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு வந்துள்ளனர்.
அங்கு வைத்து அவர்கள் 2 பேரும் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. அப்போதும், அமுல்யா தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி லோகேசை வற்புறுத்தி உள்ளார். அப்போது தனக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளதாகவும், அதனால் திருமணம் செய்ய முடியாது எனவும் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த லோகேஷ், அமுல்யாவை அடித்து, உதைத்து தாக்கி உள்ளார். பின்னர், அங்கிருந்த கயிற்றால் அமுல்யாவின் கழுத்தை இறுக்கினார். இதில், அமுல்யா மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேய பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் லோகேஷ் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். இதுபற்றி லோகேஷ், தனது நண்பரான நித்தின் என்பவரை தொடர்புகொண்டு, நடந்ததை கூறி தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நித்தின், ஹெப்பாள் போலீசாரை தொடர்புகொண்டு தகவலை தெரிவித்தார். இதையடுத்து போலீசார், லோகேஷ் தங்கியிருந்த தங்கும் விடுதிக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர் தங்கியிருந்த அறைக்கு போலீசார் சென்று பார்த்தனர். அப்போது லோகேஷ் தூக்கில் பிணமாக கிடந்தா. அமுல்யா, படுக்கையில் பிணமாக கிடந்தார். போலீசார் வருவதற்குள் லோகேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மனைவியை கைவிட்டு தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியதால் அமுல்யாவை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை சய்த லோகேஷ், போலீசுக்கு பயந்து தானும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து ஹெப்பாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.