பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் 31-ந் தேதி கடைசி நாள்

பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாள் என வேளாண்மை அதிகாரி கூறி உள்ளார்.
பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் 31-ந் தேதி கடைசி நாள்
Published on

மயிலாடுதுறை,

குறுவை நெற்பயிருக்கு பிரதம மந்திரியின் பயிர்க்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் குறுவை சாகுபடியில் விவசாயிகளுக்கு எதிர்பாராதவிதமாக ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி கிடைக்கும். மயிலாடுதுறை வட்டாரத்தில் இந்திய வேளாண் காப்பீடு நிறுவனம் மூலம் பயிர்க்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் சேர கடன் பெறும் விவசாயிகள் கடன் பெறும் வங்கிகளிலேயே திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலமாக விண்ணப்பித்து திட்டத்தில் சேரலாம். குறுவை பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் சேர கடைசி நாள் வருகிற 31-ந் தேதி ஆகும்.

வங்கி கணக்கு புத்தகம்

நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.620 காப்பீட்டு கட்டணமாகும். முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com