டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

டெல்டா மாவட்டங் களை பாதுகாக்க ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
Published on

திருவாரூர்,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வந்தது.. இதன் காரணமாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் உள்பட பல்வேறு கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கபட்டிருந்தது.

இந்த நிலையில் தேர்தல் முடிந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் கடந்த 3 மாதங் களுக்கு பிறகு திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாவட்ட தலைவர் அழகர்ராஜா தலைமையில் நிர்வாகிகள் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

ஹைட்ரோ கார்பன் திட்டம்

திருவாரூர் அருகே திருக் காரவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அந்த திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். கஜா புயலால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாய கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை செலுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த கடனை வட்டியுடன் உடன் செலுத்த வங்கிகள் நிர்பந்தப்படுத்துகின்றன. எனவே மாநில அரசு பரிந்துரை செய்து அனைத்து விவசாயிகள் கடன்களையும் தள்ளுபடி செய்ய ஆவண செய்ய வேண்டும்.

நடப்பு ஆண்டில் வயல்களில் எலி தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் நெல், பயிறு பாதிக்கப்பட்டு விவசாயிகள் மிகப் பெரிய அளவில் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர். எனவே மாவட்டம் முழுவதும் கிராமங்கள் தோறும் ஒருங்கிணைந்த எலி ஒழிப்பு முகாம் நடத்திட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com