விவசாயிகள் நூதன போராட்டம்

பிருதூர் கிராமத்தில் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் நூதன போராட்டம்
Published on

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பிருதூர் கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் சி.கீதாலட்சுமி தலைமை வகித்தார்.

வந்தவாசி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுபாஷ்சந்தர், வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.பாண்டி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பேசிய சில விவசாயிகள், சிறு,குறு விவசாயிகளுக்கு வழங்குவதற்காக தமிழக அரசு வேளாண் பண்ணைக் கருவிகளை கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் தெரிவித்தனர்.

உள்ளூர் கடைகளிலேயே அந்த கருவிகள் குறைந்த விலையில் கிடைக்கும்போது எதற்காக அதிக விலை கொடுத்து மொத்தமாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.

முன்னதாக, வேளாண் பண்ணைக் கருவிகள் முறைகேட்டை கண்டித்து தனியார் மண்டபம் முன், உழவர் பேரவையின் மாநில தலைவர் வாழ்குடை புருஷோத்தமன் தலைமையில் விவசாயிகள் சிலர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது கடப்பாரை, மண்வெட்டி, கத்தி உள்ளிட்டவைகளுக்கு மஞ்சள், குங்குமம், பூ வைத்து கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பூஜை செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com