பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை நிறுத்தியதால் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை நிறுத்தியதால் விவசாயிகள் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை நிறுத்தியதால் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Published on

பாலக்கோடு:

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை நிறுத்தியதால் விவசாயிகள் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சுமார் ஒரு லட்சம் டன் கரும்பு அரவை செய்ய விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட கரும்பு அரவை தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆலையில் எந்திர கோளாறு ஏற்பட்டதால் கரும்பு அரவையை ஆலை நிர்வாகம் நிறுத்தியது.

இதனால் விவசாயிகள் மற்றும் கரும்பு ஏற்றி வந்த லாரிகள், மாட்டு வண்டிகள் கடந்த 3 நாட்களாக அரவையின்றி உள்ளே ஆலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கரும்பு அரவையை நிறுத்தியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் டிரைவர்கள் நேற்று ஆலை வளாகத்தில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அப்பாது அவர்கள் கரும்பு அரவை எப்போது தொடங்கும் என்றும், எத்தனை நாளைக்கு காத்திருப்பது என நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆலை நிர்வாகத்தினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்பேது தானியங்கி எந்திரங்கள் தற்போது கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய பெங்களுருவில் இருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் வந்துள்ளனர். மாலைக்குள் கோளாறு சரி செய்யப்பட்டு அரவை பணி தொடர்ந்து நடைபெறும். அதற்கான முழு முயற்சியில் ஆலை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது என்று உறுதி அளித்தனர். இதையடுத்து கரும்பு விவசாயிகள் மற்றும் டிரைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com