திருக்குறுங்குடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பெரியகுளம் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி திருக்குறுங்குடியில் நேற்று விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருக்குறுங்குடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Published on

ஏர்வாடி:

பெரியகுளம் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி திருக்குறுங்குடியில் நேற்று விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடியில் கொடுமுடியாறு நீர் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீர் பாசன சங்க தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார்.

விவசாயிகளின் வாழ்வாதாரமான திருக்குறுங்குடி பெரியகுளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். வனவிலங்குகளால் விவசாயம் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும். விவசாய இடுபொருட்கள் விலையை குறைக்க வேண்டும். நீர்நிலை ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும். கனிமவள கொள்ளையை தடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் சிறு குறு விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோஷம் எழுப்பினர்

ஆர்ப்பாட்டத்தில் திருக்குறுங்குடி கொடுமுடியாறு நீர் பாசன விவசாயிகள் நலச்சங்கம் மற்றும் கேசவநேரி, சண்முகபுரம், நந்தகோபாலசமுத்திரம், குளத்துகுடியிருப்பு, ராஜபுதூர், திருக்குறுங்குடி, நம்பிதலைவன்பட்டயம், தளவாய்புரம் பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com