காஞ்சீபுரத்தில் நாளை விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்டத்தின் நவம்பர் 2021 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
காஞ்சீபுரத்தில் நாளை விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
Published on

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தின் நவம்பர் 2021 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கூட்டம் நடைபெறும் அன்றைய தினம் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில் இணையவழி விவசாயிகள் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் தேவைப்படும் விவசாயிகள்

ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல் நகல், நிலவரை படம் நகல், ரேஷன் கார்டு-நகல், பாஸ்போட் சைஸ் போட்டோ 1, இணையவழி சிறு/ குறு விவசாய சான்றுடன் ஆவணங்களை சமர்ப்பித்து திட்டத்தில் பதிவு செய்து பயனடையலாம். அன்றைய தினம் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதால் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆதார் அட்டை நகலை காண்பித்து தடுப்பூசி செலுத்திகொள்ளலாம்.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கட்டாயமாக முக கவசம் அணிந்து வர வேண்டும். மேலும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com