நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் காலத்திற்கு ஏற்ப நவீன முறைக்கு மாறும் விவசாயிகள்

நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் காலத்திற்கு ஏற்ப நவீன முறைக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர்.
நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் காலத்திற்கு ஏற்ப நவீன முறைக்கு மாறும் விவசாயிகள்
Published on

வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தென்னை, வாழை, நெல், சோளம், கரும்பு, கத்தரி, மிளகாய், பாகற்காய், புடலை, வெண்டைக்காய் மற்றும் பூச்செடிகளை சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால், இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததாலும், தைல மரங்கள், சீமைக் கருவேல மரங்கள் அதிகளவு உள்ளதாலும் விவசாயம் செய்ய தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த காரணங்களால் இப்பகுதிகளில் உள்ள ஒரு சில விவசாயிகள் சொந்த முதலீட்டில் சொட்டு நீர் பாசன முறையில் விவசாயம் செய்து வருகின்றனர். அந்தவகையில் மல்லிகை செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வருகின்றனர். இப்பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு நவீன வேளாண் கருவிகளை நூறு சதவீத மானியத்தில் அரசு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இறவைபெட்டி மூலம்...

அன்னவாசல் முக்கண்ணாமலைப்பட்டி அருகே உள்ள வேளாம்பட்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாததால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் நெற்பயிருக்கு பாய்ச்சுவதற்காக இறவை பெட்டி மூலம் நீர் பாய்ச்சி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com