சிறையில் தந்தை-மகன் மரணம்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று கடைகள் அடைப்பு - வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை-மகன் சிறையில் மரணம்அடைந்ததை கண்டித்து திருப்பூர் மாவட்டம் முழுவதும்இன்று (புதன்கிழமை) கடைகள் அடைக்கப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.
சிறையில் தந்தை-மகன் மரணம்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று கடைகள் அடைப்பு - வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு
Published on

திருப்பூர்,

துத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான தந்தையும், மகனும் சிறையில் மரணமடைந்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று (புதன்கிழமை) கடையடைப்பு போராட்டத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பேரவை நிர்வாகிகள் தனது உறுப்பினர்களுக்கு இதுதொடர்பாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருப்பூர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் கூறும்போது, மாநில தலைவரின் அறிவிப்புபடி நாளை(இன்று) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வணிகர்கள் அனைவரும் கடையடைப்பு நடத்துகிறார்கள்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 500 உறுப்பினர்கள் பேரவையில் உள்ளனர். இவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் மளிகை கடைகள், காய்கறிகடை உரிமையாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com