கொரோனாவுக்கு பெண் அதிகாரி உள்பட 4 பேர் பலி

கொரோனாவுக்கு பெண் அதிகாரி உள்பட 4 பேர் பலியாகினர்
கொரோனாவுக்கு பெண் அதிகாரி உள்பட 4 பேர் பலி
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 74 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 7 ஆயிரத்து 815 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 6 ஆயிரத்து 966 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 707 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 142 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 65 வயது மதிக்கத்தக்க 2 முதியவர்கள் நேற்று சிகிச்சை பலனின்றி பலியாகினர். இதேபோல் மதுரையில் வருவாய்த்துறையில் பணியாற்றிவந்த 45 வயது பெண் அதிகாரி ஒருவர் தொற்றால் பாதிக்கபட்ட நிலையில் சொந்த ஊரான ராமநாதபுரம் வந்து அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார்.

இது தவிர ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியானதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நேற்று அரசு மற்றும் அரசு ஆஸ்பத்திரி கணக்கீட்டின்படி 2 பெண்கள் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர். கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நேற்று முன்தினம் 150 ஆக இருந்த நிலையில் நேற்று பாதியாக குறைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com