திருப்பூர் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் பெண் வாக்காளர்கள் அதிகம்

திருப்பூர் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 52 ஆயிரத்து 785 ஆகும். இதில் பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். 11 லட்சத்து 88 ஆயிரத்து 733 பெண் வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 63 ஆயிரத்து 767 பேர் உள்ளனர்.

மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் தாராபுரம், காங்கேயம், அவினாசி, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.

குறிப்பாக பல்லடம் சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 3 லட்சத்து 87 ஆயிரத்து 111 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 904 பெண் வாக்காளர்கள் இருக்கிறார்கள். தாராபுரத்தில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 111 பெண் வாக்காளர்கள், காங்கேயத்தில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 646 பெண் வாக்காளர்களும், அவினாசியில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 294 பெண் வாக்காளர்களும், உடுமலையில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 113 பெண் வாக்காளர்களும், மடத்துக்குளத்தில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 189 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.

திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்களே அதிகம் இருக்கிறார்கள். வடக்கு தொகுதியில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 593 ஆண் வாக்காளர்களும், திருப்பூர் தெற்கு தொகுதியில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 490 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மாவட்ட அளவில் ஆண் வாக்காளர்களை விட 24 ஆயிரத்து 966 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com