காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
Published on

வாக்காளர் பட்டியல் வெளியீடு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), உத்திரமேரூர், காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார்.

மேலும் வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 41 ஆயிரத்து 462. பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 73 ஆயிரத்து 685, இதர வாக்காளர்கள் 182 என மொத்தம் 13 லட்சத்து 15 ஆயிரத்து 329 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலை அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், ஆர்.டி.ஓ., நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், வருவாய் ஆர்.டி.ஓ. வித்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2021-க்கான இறுதி வாக்காளர் பட்டியல் கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேற்று வெளியிடப்பட்டன இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் வெளியிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 13 லட்சத்து 46 ஆயிரத்து 543 ஆண் வாக்காளர்கள், 13 லட்சத்து 69 ஆயிரத்து 458 பெண் வாக்காளர்கள், இதரர் 384 என மொத்தம் 27 லட்சத்து 16 ஆயிரத்து 385 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலை அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர, தாசில்தார் மற்றும் நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் அலுவலக நேரங்களில் இந்த இறுதி வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடலாம் என கலெக்டர ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com