தனியார் வங்கிக்கு ரூ.8 லட்சம் அபராதம்

ரெயில்சேவை பாதிப்புக்கு காரணமான தனியார் வங்கிக்கு மத்திய ரெயில்வே ரூ.8 லட்சம் அபராதம் விதித்தது.
தனியார் வங்கிக்கு ரூ.8 லட்சம் அபராதம்
Published on

மும்பை,

மும்பையில் மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேக்களின் சந்திப்பு ரெயில் நிலையமாக விளங்கும் தாதர் ரெயில் நிலையத்தில் பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. மத்திய ரெயில்வே தாதர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் அருகே பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் இருந்தது.

அந்த ஏ.டி.எம். மையத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த அந்த வங்கி நடவடிக்கை மேற்கொண்டது. கடந்த மாதம் 27-ந்தேதி மாலை அந்த ஏ.டி.எம். மையத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, ஏ.டி.எம். எந்திரத்துடன் இணைப்பில் இருந்த கேபிள் வயர் 4-ம் எண் பிளாட்பாரத்தின் மேலே செல்லும் ஓவர்ஹெட் மின்கம்பியில் விழுந்து பயங்கரமாக தீப்பொறி பறந்தது. இந்த சம்பவத்தின் காரணமாக நீண்ட தூர ரெயில்கள் மற்றும் விரைவு மின்சார ரெயில்கள் நின்று செல்லும் அந்த வழித்தடத்தில் ரெயில் சேவை 10 நிமிடங்கள் வரை பாதிக்கப்பட்டது.

இதன் மூலம் ரெயில்வேக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் மத்திய ரெயில்வே அந்த தனியார் வங்கிக்கு ரூ.8 லட்சம் அபராதம் விதித்து உள்ளது. இது தொடர்பாக அந்த வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் பதில் ஏதும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com