

மும்பை,
மும்பை, கோரேகாவ் வால்பர்ட் ரோட்டில் உள்ளது காமா தொழிற்பேட்டை பகுதி. இங்குள்ள ஒரு கடையில் நேற்று காலை 8 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அதற்குள் தீ அருகில் உள்ள மற்ற கடைகளுக்கும் பரவியது. பெரும்பாலான கடைகளில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. எனவே தீ மளமளவென எரியத் தொடங்கியது.
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர். இந்த பயங்கர தீ விபத்தில் தொழிற்பேட்டையில் இருந்த 15க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின.
காலை நேரம் என்பதால் தீப்பிடித்த கடைகளில் யாருமில்லை. எனவே இந்த விபத்தில் யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக விபத்து நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.