சோதனை சாவடிக்கு தீவைப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பேரளம் அருகே சோதனை சாவடிக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சோதனை சாவடிக்கு தீவைப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
Published on

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே பூந்தோட்டம்-காரைக்கால் சாலையில் பண்டாரவாடை திருமாளம் என்ற கிராமம் உள்ளது. இங்கு போலீசார் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சோதனை சாவடி, கூரை கொட்டகையில் இயங்கி வந்தது.

இந்த சோதனை சாவடி நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது அங்கு போலீசார் இல்லை. இதில் சோதனை சாவடி கொட்டகை முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.5 ஆயிரம் ஆகும்.

மர்ம நபர்கள்

இந்த சம்பவம் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் மர்ம நபர்கள், சோதனை சாவடிக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதுதொடர்பாக பண்டாரவாடை திருமாளம் கிராம நிர்வாக அதிகாரி ஸ்டாலின், பேரளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோதனை சாவடிக்கு தீ வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com