தேர்தல் அறிக்கையில் புரட்சி செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கே மக்கள் ஆதரவு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெருமிதம்

தேர்தல் அறிக்கையில் புரட்சி செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கே மக்களின் ஆதரவு உள்ளது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெருமிதமாக கூறினார்.
தேர்தல் அறிக்கையில் புரட்சி செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கே மக்கள் ஆதரவு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெருமிதம்
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 6-& வது நாளான நேற்று திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி காளியம்மன் கோவிலில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.

இதையடுத்து மாநகராட்சி வார்டுகளான 13, 14, 15, 16, 31, 32, 33 ஆகிய வார்டு பகுதிகளான கோபால்நகர், அபிராமி குப்பம், பன்றிமலை சுவாமிகள் தெரு, புதூர், மேற்கு மரியநாதபுரம், கிழக்கு மரியநாதபுரம், குள்ளனம் பட்டி பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் வீதி, வீதியாக சென்று அமைச்சர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, 2016&-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவோடு எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றதில் இருந்து 5 ஆண்டுகளாக பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்க பாடுபட்டுள்ளேன் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. 15, 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் பெற்று வந்த திண்டுக்கல் வாசிகளுக்கு தற்போது தினமும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.

திண்டுக்கல் மாநகராட் சிக்கு மட்டும் காவிரியில் இருந்து தனி குழாய் பொருத்தப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வருணபகவானின் கருணையால் ஆத்தூர் காம ராஜர் அணை நிரம்பி உள்ளது. இதனால் அங்கிருந் தும் திண்டுக்கல் மக்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது.

மேலும் திண்டுக்கல் அடியனூத்து பகுதியில் ரூ.325 கோடியில் மருத்துவ கல்லூரி அமைக்கும் பணிகள் நடக்கிறது. இந்த மருத்துவக் கல்லூரி செயல்பாட்டுக்கு வந்தால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கிடைக்கும் உயர்தர சிகிச்சை, இங்கு கிடைக்கும். இதுதவிர, மும்மத நல்லிணக்க நகரமாக திண்டுக்கல் திகழ்கிறது.

எனவே அனைத்து தரப்பினரின் கோரிக்கைகள் மீதும் நான் பாகுபாடின்றி விசாரணை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து வருகிறேன் என்பதை மும்மதத்தினரும் அறிவார்கள். கடந்த 5 ஆண்டு காலத்தில் வணிகர்களுக்கு பக்கபலமாக அ.தி.மு.க. செயல்பட்டுள்ளது என்பது திண்டுக்கல் நகர வியாபாரிகள் அனைவரும் அறிந்ததே. வணிகர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமைச்சர் என்ற முறையில் நான் செய்து கொடுத்துள்ளேன் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு தனது தேர்தல் அறிக்கையில் இலவச வாஷிங் மெசின், நகர பஸ்களில் பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புரட்சி செய்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

மக்களின் ஆதரவும் அவருக்கு தான் உள்ளது. எனவே நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து அ.தி.மு.க.வை அமோக வெற்றி பெற செய்வது உறுதி என்றார். முன்னதாக ஆயர் தாமஸ் பால்சாமியை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது ஆயருக்கு பொன் னாடை அணிவித்து கவுர வித்தார். பிரசாரத்தின் போது, கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதிமுருகன், அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், மாவட்ட கவுன்சிலர் முருகன், சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் யூஜின், திண்டுக்கல் வளனார் தேவாலய நாட்டாமை சங்க தலைவர் ராஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம் மற்றும் பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு வாக்குகள் சேகரித்தனர்.

இதே போல் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுடன், அமைப்புச் செயலாளர் மருதராஜ், திண் டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ் மோகன் , ஜெ பேரவை செயலாளர் பாரதி முருகன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளிதரன் இளைஞர் அணி எம்ஜிஆர் மாவட்ட செயலாளர் வி.டி. ராஜன் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நீலா மணிகண்டன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com