முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி திருவண்ணாமலை வருகை மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தகவல்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 4-ந் தேதி திருவண்ணாமலைக்கு வருகிறார் என கீழ்பென்னாத்தூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி திருவண்ணாமலை வருகை மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தகவல்
Published on

கீழ்பென்னாத்தூர்,

கீழ்பென்னாத்தூரில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் திடலில் நகர, ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞரணி மற்றும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில் நுட்பபிரிவு நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பாஷ்யம், நகர செயலாளர் ஓ.சி.முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.கே.அரங்கநாதன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சி.தொப்பளான், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பீரங்கி வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் அமுதாஅருணாச்சலம், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் டிஸ்கோ குணசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு, ஒன்றியத்தில் உள்ள 45 கிளைகள், பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞரணி, இளைஞர் மற்றும் இளைஞர் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பபிரிவு ஆகியவற்றுக்கான உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களையும், 45 அ.தி.மு.க.கிளை செயலாளர்களுக்கு செலவின தொகையாக தலா ரூ.5 ஆயிரத்தையும் வழங்கினார்.

முதல்-அமைச்சர் வருகை

அப்போது அவர் பேசுகையில், கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி புதியதாக உருவானபோதே அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அதேபோன்று வருகிற சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற வைப்பதாக உங்கள் பணி இருக்க வேண்டும். இளம்பெண்கள், இளைஞர்கள் பாசறைக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 30 வயது நிரம்பியவர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். ஒவ்வொரு பூத்திற்கும் குறைந்தபட்சம் 25 நபர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். வருகிற 4-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலைக்கு வருகை தர உள்ளார். கீழ்பென்னாத்தூர் வழியாக செல்லும் அவருக்கு அங்குள்ள பஸ் நிலையத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து சிறப்பான முறையில் வரவேற்க வேண்டும் என்றார்.

இதில் ஒன்றிய அவைத்தலைவர் வயலூர் சதாசிவம், முன்னாள் ஒன்றிய செயலாளர் பி.மோகன், முன்னாள் நகர செயலாளர்கள் கட்டைய கண்ணன், பாண்டுரங்கன், நகர பொருளாளர் கஜேந்திரன், நகர துணை செயலாளர் ராஜேந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில்குமரன், கூட்டுறவு வங்கி இயக்குனர் வேடநத்தம் ஏழுமலை, ஒன்றிய துணை செயலாளர் ஆறுமுகம், வட்ட செயலாளர்கள் கதிரேசன், பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஞானசேகரன், கிருஷ்ணமூர்த்தி, குப்புசாமி, கோபி என்ற கேசவன், நகர மகளிரணி செயலாளர் மல்லிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராஜன்தாங்கல்

இதேபோல் ராஜன்தாங்கலில் நடந்த. நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு உறுப்பினர்கள் சேர்ப்பதற்கான படிவங்களை கீழ்பென்னாத்தூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் செயலாளரும், திருவண்ணாமலை மாவட்ட ஆவின் நிர்வாக குழு உறுப்பினருமான எஸ்.தட்சணாமூர்த்தியிடம் வழங்கி பேசினார்.

இதில் கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் ஆர்.பாஷ்யம், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சி.தொப்பளான், ஒன்றிய அவைத்தலைவர் வயலூர் சதாசிவம், ஒன்றிய எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் தனசேகர், இளைஞர் பாசறை செயலாளர் பிரபு, ஆவூர் சம்பத்குமார், கூட்டுறவு கடன் சங்க தலைவர் வீரமணி, இயக்குனர் வேடநத்தம் ஏழுமலை உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com