மறைந்த தாய்மாமா உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை

மறைந்த தாய்மாமா உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மறைந்த தாய்மாமா உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை
Published on

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் தமிழக முதல்-அமைச்சரின் தாய்மாமாவும், ஈரோடு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளருமான கே.பி.எஸ். ராஜாவின் தந்தையுமான கருப்பகவுண்டர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கருப்பகவுண்டர் காலமானார்.

இதைத்தொடர்ந்து நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்தியூர் வந்து தாய்மாமாவின் இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த கருப்பகவுண்டரின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அமைச்சர்கள்...

அவருடன் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், தங்கமணி, எம்.எல்.ஏக்கள் இ.எம்.ஆர்.ராஜா, ஈஸ்வரன், தென்னரசு, கே.வி.ராமலிங்கம், வி.பி.சிவசுப்பிரமணி, மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ரமணீதரன், கலெக்டர் கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, அ.தி.மு.க ஈரோடு மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.பி.பழனிசாமி, மாவட்ட கவுன்சிலர் சண்முகவேல், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ஏ.கே.வெங்கடாசலம், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.சி.ஆர். கோபால், அந்தியூர் ஒன்றிய துணைச் செயலாளர் சண்முகானந்தம், ஈரோடு மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஏ.பி.எஸ்.சரவணன், அந்தியூர் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏர்செல் மூர்த்தி மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com