இளையான்குடி ஊருணியில் திடீரென செத்து மிதந்த மீன்கள்

இளையான்குடி ஊருணியில் திடீரென மீன்கள் செத்து மிதந்தன.
இளையான்குடி ஊருணியில் திடீரென செத்து மிதந்த மீன்கள்
Published on

இளையான்குடி,

இளையான்குடியில் அமைந்துள்ள ராஜேந்திர சோளீஸ்வரர் கோவிலில் தெய்வ புஷ்கரணி ஊருணி உள்ளது. இதில் இருந்த மீன்கள் திடீரென செத்து மிதந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சமூக ஆர்வலர்களால் ஊருணி முழுவதுமாக தூர்வாரி சுத்தமான மழை நீர் நிரப்பப்பட்டது. தற்போது ஊருணியில் கழிவுநீர் கலப்பதால் அதில் இருந்த மீன்கள் அனைத்தும் செத்து மிதந்து கரை ஒதுங்கி துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அருகே உள்ள பள்ளிவாசலில் தொழுகையை நடத்த முடியாமலும் பஸ் நிலையம் மற்றும் வங்கி, தினசரி மார்க்கெட்டுக்கு செல்லமுடியாத சூழ்நிலை உள்ளது. எனவே இந்த நிலையை மாற்றி பேரூராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கையின் மூலம் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி, அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து நோய் அபாயத்தில் இருந்து பொது மக்களை காப்பாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கோரிக்கை

மேலும் இனிவரும் காலங்களில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.மழைநீரால் ஊருணி நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இளையான்குடி நீர் ஆதாரத்தை பெருக்க சுத்தமான நீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com