

ஆத்தூர்:
ஆத்தூர் நகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று கொரோனாவுக்கு 3 பெண்கள் உள்பட 5 பேர் பலியானார்கள். ஆத்தூரை சேர்ந்த 53 வயது ஆண் ஒருவரும், கடைவீதி ஆரியா தெருவை சேர்ந்த 48 வயது நகைக்கடை உரிமையாளர், வ.உ.சி. நகரை சேர்ந்த 72 வயது பெண், புதுப்பேட்டை சத்திரம் பகுதியைச் சேர்ந்த பெண், நடேசய்யர் காலனியை சேர்ந்த 72 வயது பெண் ஆகிய 5 பேர் கொரானா தொற்று ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதேபோல நேற்று முக கவசம் அணியாத 4 பேருக்கு ரூ.200 வீதம் ரூ.800-ம், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 4 கடை உரிமையாளர்களுக்கு ரூ.500 வீதம் ரூ.2 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.