

வேதாரண்யம்:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேதாரண்யத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
கொடி அணிவகுப்பு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. வேதாரண்யம் நகராட்சியில் 21 வார்டுகளுக்கான கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகிறார்கள். இ்தன் ஒரு பகுதியாக வேதாரண்யம் நகரின் முக்கிய வீதிகளில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இந்த கொடி அணிவகுப்பில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுப்ரியா, நாகலட்சுமி, செந்தில்குமார், மலர்கொடி மற்றும் வேதாரண்யம் சரக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஊர்க் காவல் படையினர் பங்கேற்றனர்.
அச்சமின்றி வாக்களிக்க...
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.