ஒளிரும் பட்டை, ஜி.பி.எஸ். கருவி வாங்கியதில் முறைகேடு நடக்கவில்லை; கே.என்.நேரு குற்றச்சாட்டுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதில்

ஒளிரும் பட்டை, ஜி.பி.எஸ். கருவி வாங்கியதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று கே.என்.நேரு குற்றச்சாட்டுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதில் அளித்தார்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்; கே.என்.நேரு
போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்; கே.என்.நேரு
Published on

இரட்டை பதிவுகள்

கரூரில் நேற்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தில், தி.மு.க.வினர் திட்டமிட்டு ஒரே குடும்பத்தில் உள்ளவர்களை 3 இடங்களில் வாக்காளர் பட்டியலில் சேர்த்து உள்ளனர். அதேபோன்று பல இடங்களில் முறைகேடு செய்துள்ளனர்.

கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, கரூர் தொகுதியில் 30 ஆயிரம் பேரும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 20 ஆயிரம் பேரும் அ.தி.மு.க.வினர் வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர் என்று கூறியுள்ளார். இதுவரை 6 ஆயிரம் பேர் தான் பெயர் சேர்க்க விண்ணப்பித்தே உள்ளனர். அதற்குள் எப்படி இவ்வளவு பேரை பட்டியலில் சேர்க்க முடியும். வாக்காளர் பட்டியலில் 30 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டதை செந்தில்பாலாஜி நிரூபிக்க தயாரா? கரூர் மாவட்டத்தில் இறந்த 18 ஆயிரம் பேர் பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ளது. அதில் இதுவரை 5 ஆயிரம் பேர் மட்டுமே நீக்கப்பட்டு உள்ளது.

இறந்தவர்களின் பெயரை நீக்க அதிகாரிகள் இறப்பு சான்றிதழ் கேட்கிறார்கள். இறப்பு சான்றிதழ் பெற்று வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்க வேண்டும் என்றால் நிச்சயம் 13 ஆயிரம் பேரின் பெயரை நீக்க முடியாது. எனவே அதிகாரிகள் சரியாக விசாரித்து படிவத்தை ஏற்று பெயர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்பது தான் அ.தி.மு.க.வின் கோரிக்கை ஆகும்.

கே.என்.நேரு மீது ஊழல் புகார்

போக்குவரத்துக்கான ஒளிரும் பட்டை, ஜி.பி.எஸ்.கருவிகள் வாங்கியதில் அ.தி.மு.க. அரசு ஊழல் செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். தி.மு.க. ஆட்சியில், கே.என்.நேரு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அவரது ஊழல் பட்டியலை அன்று அ.தி.மு.க.வில் இருந்த செந்தில்பாலாஜி ஜெயலலிதா முன்பு சட்டமன்றத்தில் எடுத்துக் கூறினார். அப்போது ஊழல் வழக்கில் சிக்கிய கே.என்.நேரு இன்றைக்கு அ.தி.மு.க. அரசில் ஊழல் நடந்து விட்டது போல் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அன்றைக்கு கே.என்.நேரு மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முதலில் செந்தில்பாலாஜி பதில் சொல்லட்டும். ரூ.23 கோடி டெண்டரை ரூ.900 கோடி என்று ஸ்டாலின் தவறான அறிக்கை கொடுத்து உள்ளார். அதை நிரூபிக்க தயாரா? என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு இன்னும் பதில் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com