கலிக்கம்பட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு மலர்தூவி மரியாதை

கலிக்கம்பட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு மலர்தூவி மரியாதை.
கலிக்கம்பட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு மலர்தூவி மரியாதை
Published on

சின்னாளபட்டி,

சின்னாளபட்டி அருகே உள்ள கலிக்கம்பட்டி ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் தூய்மை பணியாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ஆத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நேற்று கலிக்கம்பட்டி ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. இதையொட்டி தூய்மை பணியாளர்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டனர். ஆத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.கே.டி.நடராஜன், கலிக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கோமதி செல்வகுமார், ஒன்றிய கவுன்சிலர் ராஜலட்சுமி சந்தானகிருஷ்ணன் ஆகியோர் தூய்மை பணியாளர்கள் மீது மலர் தூவி மரியாதை செய்தனர். இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள், பொது மக்களுக்கு 10 கிலோ அரிசி, பருப்பு, காய்கறிகள், மளிகை பொருட்களை அவர்கள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் கோபி, ஆலமரத்துப்பட்டி ஊராட்சி செயலாளர் சந்தானகிருஷ்ணன், கலிக்கம்பட்டி ஊராட்சி செயலாளர் பழனிசாமி, மாவட்ட மீனவரணி இணை செயலாளர் அந்தோணிசாமி, ஆத்தூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் நடராஜன், ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழி பாலாஜி, ஆரியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணியம்மா அலெக்ஸ், கலிக்கம்பட்டி ஊராட்சி மன்ற துணை தலைவர் அன்பரசி, ஊராட்சி மன்ற செயலாளர் ராமசாமி மற்றும் ஆலமரத்துப்பட்டி, கலிக்கம்பட்டி அனைத்து கிளை செயலாளர்கள், கலிக்கம்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com