

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் கிராமம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 43). இவர் பேரம்பாக்கம் பெட்ரோல் நிலையம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பெட்ரோல் நிலையம் அருகே திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் கபிலர் நகர் அதியமான் தெருவை சேர்ந்த வெங்கடேசன் என்கிற சொன்னாடிக்கா (25) என்பவர் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்களை பெரிய பையில் வைத்து கொண்டிருந்தார். இதை சரவணன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் அவரை தகாத வார்த்தைகளால் பேசி வெட்டிக் கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு தப்பிச்சென்று விட்டார்.
இதுகுறித்து சரவணன் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து அவரிடம் இது சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர்.