அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ‌.6 ஆயிரம் நிவாரணம் நாராயணசாமி வேண்டுகோள்

அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.6 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ‌.6 ஆயிரம் நிவாரணம் நாராயணசாமி வேண்டுகோள்
Published on

புதுச்சேரி,

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் கொரோனா தாக்கம் குறைந்தாலும், உயி ரிழப்பு அதிகரிக்கிறது. மாநிலத்திற்கு தேவையான ஆக்சிஜன் கிடைத்தாலும், போதுமான படுக்கை வசதிகள் இல்லை. இதன் காரண மாகவே உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. தற்போது ஆக்சிஜன் படுக்கை, வெண்டிலேட்டர் படுக்கைகளை அதிகரிப்பதாக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இதனை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.

கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை யில் 700 படுக்கை வசதி உள்ளது. ஆனால் அங்கு 427 பேர் தான் அனுமதிக்கப்படு கின்றனர். இதனை உயர்த்த வேண்டும். மற்ற துறைகளின் நிதியை மருத்துவத்துக்கு பயன்படுத்த வேண்டும்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் மாநில நிர்வாகத்தை மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசு கண்காணிக்க வேண்டும். தேர்தல் முடிந்து பல நாட்கள் ஆகியும் மக்கள் பிரச்சினைகளை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதுதொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் வேதனை அளிக்கிறது. புதுச்சேரிக்கு குறைந்த அளவிலேயே தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக உருவாகி வரும் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை காக்க அரசு முன்வர வேண்டும்.

கொரோனாவால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்குவதாக நாங்கள் அறிவித்தோம். ஆனால் அது தடுத்து நிறுத்தப்பட்டு விட்டது. புதுவையில் ஊரடங்கை மாநில அரசு முழுமையாக கடைபிடிக்கவில்லை.

தெருக்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மாநிலத்தில் 70 சதவீதம் பேர் வேலை இழந்து வருமானமின்றி தவிக்கின்றனர். எனவே ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும்.

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. அவர்களை சோனியா காந்தி, ராகுல் காந்தி மன்னித்து விட்டார்கள். விடுதலை செய்யவும் பெருந்தன்மையோடு கூறியுள்ளனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவர்களை விடுவிக்க குரல் எழுப்பி வருகின்றனர். தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்பது எனது கருத்து. ராஜீவ்காந்தியை கொன்றவர்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com