கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து தட்டுப்பாடு விரைவில் நீங்கும் மத்திய மந்திரி சதானந்தகவுடா பேட்டி

கருப்பு பூஞ்சை நோயக்கான மருந்து தட்டுப்பாடு மிக விரைவில் நீங்கும் என்று மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறினார்.
கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து தட்டுப்பாடு விரைவில் நீங்கும் மத்திய மந்திரி சதானந்தகவுடா பேட்டி
Published on

பெங்களூரு, -

மத்திய உரம், ரசாயனத்துறை மந்திரி சதானந்தகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களில் சிலரை கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. இதனால் இந்த நோய் சிகிச்சைக்கு தேவையான ஆம்போடெரிசின்-பி மருந்து வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. அத்துடன் இந்தியாவில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் அதன் உறபத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாநிலங்களுக்கு மேலும் 1.21 லட்சம் ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் கர்நாடகத்திற்கு 9,750 குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மிக விரைவில் இந்த மருந்தின் தேவைக்கும், வினியோகத்தற்கு இடையே உள்ள கால இடைவெளி குறையும். அதாவது கருப்பு பூஞ்சை நோய்க்கான அந்த மருந்து தட்டுப்பாடு நீங்கும்.

ஆக்சிஜன் செறிவூட்டிகளின் தேவை அதிகரித்துள்ளது. அதன் அந்த கருவிகளின் விலை அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. அதனால் அவற்றின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் ஆக்சிஜன் செறிவூட்டிகளின் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்யும்.

மத்திய அரசு விலையை நிர்ணயம் செய்த பிறகு அதை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தால், அத்தகைய நிறுவனங்களுக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். வருகிற டிசம்பர் மாதத்திற்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் 50 சதவீத தடுப்பூசியை மத்திய அரசு வினியோகம் செய்ய உள்ளது. இவ்வாறு சதானந்தகவுடா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com