

சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத்துறை சார்பில் 19 ஆயிரத்து 605 தூய்மை பணியாளர்களால் தினந்தோறும் 5 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்படுகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை வீடுகள் தோறும் சென்று சேகரிக்கும் பணிகளுக்காக பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் 5 பேட்டரி வாகங்களை நேற்று மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் ரிப்பன் மாளிகையில் தொடங்கி வைத்தார்.
இந்த 5 வாகனங்களும் ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் குப்பை அகற்றும் பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது. ஏற்கனவே 22 பேட்டரி வாகனங்கள் சென்னை மாநகராட்சியில் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.