அரசு போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெற புதிய இணையதளம் கலெக்டர் ஷில்பா தகவல்

அரசு போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெற புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது.
அரசு போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெற புதிய இணையதளம் கலெக்டர் ஷில்பா தகவல்
Published on

நெல்லை,

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், போட்டித்தேர்வுகளை எதிர்கொண்டு அரசு பணிக்கு செல்ல விரும்பும் அனைத்து இளைஞர்களும் பயன்பெறும் வகையில், மெய்நிகர் கற்றல் என்ற வலைதளம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் வலைதள முகவரி https://www.tncarieerservices.tn.gov.in ஆகும்.

அந்த இணையதளத்தில் மத்திய, மாநில அரசினால் நடத்தப்படும் போட்டி தேர்வுக்கான குறிப்புகளை எடுத்து கொள்ள பாடக்குறிப்புகள், தேர்வுகளை எழுதி பார்க்க வினா வங்கிகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்து வருகின்ற இளைஞர்கள் www.tnvelaivaippu.gov.in என்ற இணையதள முகவரியில் உள்ள virtual learning portal என்ற பகுதியில் தங்களது பெயரினை கட்டணம் இல்லாமல் இலவசமாக பதிவு செய்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய, மாநில அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போதைய கொரோனா ஊரடங்கு காலத்தில் அலுவலகத்திற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால் இணையவழி இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள், நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரிலோ அல்லது 0462-2500103 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டோ விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com