எனது பிறந்தநாளுக்கு கட்-அவுட் வைக்க வேண்டாம் நாராயணசாமி வேண்டுகோள்

தனது பிறந்தநாளுக்கு கட்-அவுட், பேனர் வைக்கவேண்டாம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார்.
எனது பிறந்தநாளுக்கு கட்-அவுட் வைக்க வேண்டாம் நாராயணசாமி வேண்டுகோள்
Published on

புதுச்சேரி,

புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேருவின் நினைவுநாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தி முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

நான் வழக்கமாக எனது பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை. எனது பிறந்தநாளுக்கு யாரும் கட்-அவுட், பேனர் வைக்கவேண்டாம். ஆனால் போஸ்டர் ஒட்ட தடையில்லை.

எதை செய்தாலும் பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் செய்யவேண்டும். ஒருவருக்கு ஒபாமா போன்று படம் வைத்து வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்.

பேனர் வைப்பவர்களுக்கு நான் மைனஸ் மார்க்தான் போடுவேன். கட்-அவுட், பேனர் வைத்தால் எனது சொந்த செலவில் பொக்லைன் எந்திரம் மூலம் அவற்றை அகற்றுவேன். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com