நாடாளுமன்றத்துக்கு0 ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி முதல்-மந்திரி குமாரசாமி ஆதரவு

நாடாளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நிறுத்தப்பட்டால் ஆதரிப்போம் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்தார்.
நாடாளுமன்றத்துக்கு0 ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி முதல்-மந்திரி குமாரசாமி ஆதரவு
Published on

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் காய்கள் நகர்த்த தொடங்கி உள்ளன.

பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் வேட்பாளராக களம் இறங்குகிறார். பா.ஜனதாவுக்கு எதிராக மாநில கட்சிகள் ஒன்றுகூடி கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகின்றன. பிரதமர் வேட்பாளராக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆதரிப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபுநாயுடு, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தலுக்கு பிறகு பிரதமரை தேர்வு செய்யலாம் என்றனர்.

இந்த நிலையில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திக்கு கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டால், அவரை நாங்கள் ஆதரிப்போம். இதற்கு எங்கள் கட்சியின் தேசிய தலைவர் தேவே கவுடாவும் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளும் ஒன்றுகூடி போராட வேண்டியது அவசியம். பிரதமர் பதவியை நிர்வகிக்கும் தகுதி, திறன் ராகுல் காந்திக்கு உள்ளது. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். பிரதமர் மோடிக்கு பலமான போட்டியாளர் ராகுல் காந்தி.

பிரதமர் மோடி வெறும் காகித புலி. மோடி, கடந்த தேர்தலின்போது, மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. வெறும் வாய்ப்பேச்சால் நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார். இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com