பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை கலெக்டர் ஷில்பா வழங்கினார்

பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரையை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.
பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை கலெக்டர் ஷில்பா வழங்கினார்
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் தேசிய குடற்புழு வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பாளையங்கோட்டை ஏ.ஆர்.லைனில் உள்ள பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். அவர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாத்திரைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

நாடு முழுவதும் தேசிய குடற்புழு நீக்க வாரம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த 14-ந் தேதி வார விழா தொடங்கியது. வருகிற 28-ந் தேதி வரை நடக்கிறது. தமிழ்நாடு அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அனைத்து அங்கன்வாடி மையங்களில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் பயிற்சி பெற்ற சுகாதார செவிலியர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள், களப்பணியாளர்கள் மூலம் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் 5 லட்சத்து 24 ஆயிரத்து 66 பேருக்கு இரண்டு கட்டமாக வழங்கப்பட உள்ளன. பள்ளி அளவில் அல்பெண்டேசோல் மாத்திரை வழங்கப்படுகிறது. குடற்புழு நீக்கத்தினால் ரத்த சோகை தடுக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து. சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. எனவே பொதுமக்கள் பெற்றோர் இம்முகாமில் பள்ளிகள் அங்கன்வாடிகள் மூலம் தங்கள் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரையை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் வரதராஜன், அங்கன்வாடி மைய தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உதவித்தொகை 2020-2021-ம் ஆண்டுக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஒரு கோடியே 52 லட்சத்து 79 ஆயிரத்து 435 இதுவரை செலவு செய்யப்பட்டுள்ளது. 84 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் என மொத்தம் 124 பேருக்கு வறுமைக்கான தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த இளம் சட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகளுக்கு சுயமாக தொழில் செய்வதற்காக நிதியுதவி அரசு மானியம் ரூ.50 ஆயிரம் வீதம் 9 பேருக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது. இந்த நிதியை மாவட்ட கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com