மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றக்கூடியது: மத்திய பட்ஜெட்டுக்கு ரங்கசாமி வரவேற்பு

மத்திய அரசின் 2020-21 நிதிநிலை அறிக்கை அனைத்து மக்களுக்கு ஏற்றம்தரும் வகையிலும், நாட்டின் வளர்ச்சிக்கும் புதுப்பாதை வகுத்து பயணிக்கிறது.
மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றக்கூடியது: மத்திய பட்ஜெட்டுக்கு ரங்கசாமி வரவேற்பு
Published on

புதுச்சேரி,

என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆயுஷ்மான் திட்டத்தில் புதிய மருத்துவமனைகள் கட்டுவதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கும் தரமான சிகிச்சை கிடைக்கும். கிராம பெண்களின் முன்னேற்றத்துக்கு தான்ய லட்சுமி திட்டம் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு மிகவும் வரவேற்க கூடியதாகவும், பாராட்டத்தக்க வகையிலும் உள்ளது.

விவசாயிகளுக்கு நிதியுதவி திட்டத்தினால் விவசாயிகளின் நலனில் தொடர்ந்து மத்திய அரசு அக்கறை காட்டி வருவது பாராட்டுக்குரியது. மேலும் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைக்கும் திட்டத்தை அறிவித்து தமிழின மக்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறது. மொத்தத்தில் மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றக்கூடியதாக இந்த பட்ஜெட் உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் ரங்கசாமி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com