மீத்தேன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதிபெற வேண்டும் - அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி

மீத்தேன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
மீத்தேன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதிபெற வேண்டும் - அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி
Published on

கவுந்தப்பாடி,

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்யில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு கவுந்தப்பாடி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அய்யம்பாளையம் மேல்நிலைப்பள்ளி உள்பட 4 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 603 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், மாணவ- மாணவிகளின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே மாணவ- மாணவிகள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், என்றார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு மீத்தேன் திட்டத்துக்கு மாநில அரசிடம் அனுமதி கேட்கவில்லை என்றால் கூட சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடம் (சி.ஆர்.கமிட்டி) அனுமதி பெற ஆக வேண்டும். 500 டி.டி.எஸ்.சுக்கு மேல் இருக்கும் நீரை சுத்திகரிப்பு செய்யத்தான் ஈரோடு, பவானி நகரங்களில் பொதுசுத்திகரிப்பு மையம் கொண்டு வரப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், பவானி ஒன்றியக்குழு தலைவர் பூங்கோதை வரதராஜ், புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளா கே.ஆர்.ஜான், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் அய்யம்பாளையம் சரவணன், உஷா மாரியப்பன், கவுந்தப்பாடி ஊராட்சி தலைவர் பாவா தங்கமணி, துணைத்தலைவி தீபிகா மற்றும் அரசு துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com