புஷ்கர விழாவை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்று படித்துறையில் போலீஸ் ஐ.ஜி. ஆய்வு

புஷ்கர விழாவை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்று படித்துறையில் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் ஆய்வு செய்தார்.
புஷ்கர விழாவை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்று படித்துறையில் போலீஸ் ஐ.ஜி. ஆய்வு
Published on

ஸ்ரீவைகுண்டம்,

தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழா வருகிற 12-ந்தேதி தொடங்கி, 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. விழா நாட்களில் தாமிரபரணி ஆற்றில் பல லட்சம் பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி தாமிரபரணி ஆற்றில் புனித நீராடும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்ய தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் ஆகியோர் நேற்று ஸ்ரீவைகுண்டம் வந்தனர்.

அங்கு பஸ்நிலையத்தின் பின்புறம் உள்ள தாமிரபரணி ஆற்று படித்துறையை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். படித்துறை அருகில் தற்காலிக கழிப்பறைகள், உடை மாற்றும் அறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை அவர் பார்வையிட்டார்.

அதன் பின்னர் ஆழ்வார்திருநகரி, ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோவில் தாமிரபரணி ஆற்றங்கரை ஆகிய பகுதிகளை பார்வையிட்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ், கோவில் தர்க்கார் அ.ர.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com