வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் 160 பேர் கைது

வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் 160 பேர் கைது
Published on

திருவண்ணாமலை,

பா.ஜ.க.வின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து திருவண்ணாமலை மாவட்ட பா.ஜ.க. சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார்.

இதில் பா.ஜ.க.வினர் கைது வேல் வைத்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையில் ஏராளமான போலீசார் பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 160 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சாசா.வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில ஓ.பி.சி. அணி துணைத்தலைவர் போளூர் சி.ஏழுமலை, ஓ.பி.சி. அணி மாநில செயற்குழு உறுப்பினர் மோகனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட பொது செயலாளர் எஸ்.கோவிந்தராஜ், மாவட்ட துணைத்தலைவர் பி.கோபி, மாவட்ட மகளிர் அணி தலைவர் பூங்காவனம், மாவட்ட பொதுசெயலாளர் ஜெயகோபி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லாததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் தலைமையிலான போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

வந்தவாசி தாலுக அலுவலகம் முன்பு பா.ஜ.க. தேசியக்குழு உறுப்பினர் பாஸ்கரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நகர தலைவர் சத்தியநாராயணன், முரளி, முத்துசாமி, துரை நாடார், ராம்குமார், மோகனரங்கன், செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com