வல்லூர் அனல் மின் நிலைய தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர்

வல்லூர் அனல் மின் நிலைய தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர் தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டது.
வல்லூர் அனல் மின் நிலைய தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர்
Published on

மீஞ்சூர்,

கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதை தடுக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சரும் தி.மு.க.தலைவருமான முக.ஸ்டாலின் பொதுமக்களுக்கு முககவசம் வழங்குதல், கபசுர குடிநீர் வழங்கும் பணிகள் ஆகியவற்றை வழங்க தி.மு.க.வினரை கேட்டுக்கொண்டார். அதன்படி திருவள்ளூர் மாவட்டம் அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் தலைமையில் தொ.மு.ச.வின் அனல்மின் நிலைய தலைவர் எம்.எஸ்.கே.சீனிவாசன் முன்னிலையில் தொழிலாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. அப்போது நிர்வாகிகள் சிம்சன், அருண்குமார், கோபி, ஏசுராஜா, மதன், செல்வம் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com