கொடிநாள் நிதி அதிகம் வசூலித்தவர்களுக்கு கேடயம் கவர்னர் கிரண்பெடி வழங்கினார்

கொடிநாள் நிதி அதிகம் வசூலித்தவர்களுக்கு கவர்னர் கிரண்பெடி கேடயம் வழங்கினார்.
கொடிநாள் நிதி அதிகம் வசூலித்தவர்களுக்கு கேடயம் கவர்னர் கிரண்பெடி வழங்கினார்
Published on

புதுச்சேரி,

கொடிநாள் நிதி வசூல் தொடக்கம் மற்றும் கடந்த ஆண்டு கொடிநாள் நிதி அதிகம் வசூலித்தவர்களுக்கு பரிசு வழங்கும் விழா கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. முப்படை நலத்துறை இயக்குனர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி வரவேற்று பேசி னார்.

விழாவில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு உண்டியலில் ரூ.2 ஆயிரம் போட்டு கொடிநாள் வசூலை தொடங்கி வைத்தார். மேலும் கடந்த ஆண்டு அதிக அளவில் கொடிநாள் நிதி வசூலித் தவர்களுக்கு கேடயங்களை வழங்கினார்.

அதன்படி கல்வித்துறைக்கு முதல் பரிசும், வருவாய்த் துறைக்கு 2-வது பரிசும், உயர்கல்வித்துறைக்கு 3-வது பரிசும் வழங்கப்பட்டது. மேலும் அதிக நிதி வசூலித்த காரைக்கால் மாவட்டம், ஜிப்மர் நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், கவர்னரின் சிறப்பு பணி அதிகாரி தேவநீதிதாஸ், புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங், ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால், கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, புதுச்சேரி கலெக்டர் அலுவலக தனி அதிகாரி முத்துமீனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com