

திருவள்ளூர்,
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் கிராம சுயாட்சி இயக்கத்தின் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் விழா மற்றும் கடம்பத்தூர், கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட 312 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கினார். அப்போது அவர் 38 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்களுக்கு ரூ.1 கோடியே 67 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான கடன் உதவித்தொகைகள் மற்றும் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 312 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் கிருஷ்ணம்மாள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.