சூரியஒளி மின்தகடு மோசடியில் கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி என்னை சிக்க வைத்தார்

‘சூரியஒளி மின்தகடு மோசடியில் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி என்னை சிக்க வைத்தார் ’என்று கோவையில் சரிதாநாயர் கூறினார்.
சூரியஒளி மின்தகடு மோசடியில் கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி என்னை சிக்க வைத்தார்
Published on

கோவை,

கடந்த 2009-ம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் காற்றாலை அமைத்து தருவதாக கூறி ரூ.26 லட்சம் மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் சரிதாநாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகிய 3 பேரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை 6-ம் எண் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட சரிதாநாயர் கோர்ட்டில் ஆஜரானார். ஆனால் சாட்சிகள் வராததால் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 8-ந் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு ராஜவேலு தள்ளிவைத்தார். அதன்பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த சரிதாநாயர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரளாவில் நடைபெறும் பல கோடி ரூபாய் சூரியஒளி மின்தகடு மோசடி வழக்கில் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி மற்றும் மந்திரிகள், எம்.எல்..ஏ.க்கள், அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதால் வழக்கு விசாரணை முடிய நீண்ட நாட்களாகும். மேலும் விசாரணை கமிஷன் அதிகாரிகள் கிரிமினல், சிவில், லஞ்ச ஊழல் என தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கை பொறுத்தவரை நான், முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டியால் நான் சிக்க வைக்கப்பட்டேன்.

இந்த வழக்கை பொறுத்தவரை பொதுமக்களில் ஒருவரான என்னை போன்றவர்கள் அரசியல் வாதிகளை நம்பி வியாபாரத்துக்கு அணுகிய போது ஏமாற்றப்பட்டு இருக்கிறேன். எனக்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது. கன்னியாகுமரியில் என்னால் தொடங்கப்பட்டுள்ள தொழில் நிறுவனத்துக்கு காங்கிரஸ் சார்பில் புகார் அளித்து பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக இதுபோன்ற பிரச்சினைகளை நான் பொருட்படுத்தப்போவதில்லை. எனவே நீதி கேட்டு தொடர்ந்து போராடி வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com