குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த 4 பேர் கைது

குறைந்த வட்டியில் கடன்தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த 4 பேர் கைது
Published on

தானே,

நடிகை மரியா சூசைராஜை இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் தேடுகிறது.

மாடலாக இருந்து கன்னட திரை உலகில் நுழைந்தவர் நடிகை மரியா சூசைராஜ். மும்பையை சேர்ந்த டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளரான நீரஜ் குரோவர் கொலை வழக்கில் ஆதாரங்களை அழித்ததற்காக மரியாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனையை அனுபவித்த பிறகு அவர் கடந்த 2011-ம் ஆண்டு விடுதலையானார். பின்னர் அவர் மும்பையை சேர்ந்த பரோமிதா சக்ரவர்த்தி என்பவருடன் சேர்ந்து குஜராத் மாநிலம் வதோதராவில் டிக்கெட் புக்கிங் ஏஜென்சியை தொடங்கி ஹஜ் யாத்ரீகர்களிடம் பணமோசடி செய்ததாக குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், பரோமிதா சக்ரவர்த்தியுடன் சேர்ந்து நடிகை மரியா சூசைராஜ், வங்கியை விட குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி கோடிக் கணக்கில் மோசடியில் ஈடுபட்டிருந்தது அம்பலமாகி உள்ளது.

தானேயை சேர்ந்த கட்டுமான அதிபர் ஒருவர், தனக்கு ரூ.30 கோடிக் கடன் தருவதாக கூறி, தன்னிடம் இருந்து ரூ.3 கோடி வாங்கி கொண்டு பரோமிதா சக்ரவர்த்தி, மரியா சூசைராஜ் உள்ளிட்டோர் அடங்கிய கும்பல் மோசடி செய்து விட்டதாக புகார் கொடுத்து உள்ளார்.

இந்த புகார் மீது மரியா சூசைராஜ் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பரோமிதா சக்ரவர்த்தி, ஹென்றி நிக்கோலஸ், அனிதா சுதிர், மிலிந்த் ரகுநாத் ஆகிய 4 பேரை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் கட்டுமான அதிபர்கள், காண்டிராக்டர்கள் உள்பட பலரிடம் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக தெரிவித்து பணத்தை சுருட்டியிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நடிகை மரியா சூசைராஜ் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரையும் இந்த மோசடியில் தொடர்புடைய மற்றவர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com