பால்கருக்கு சுற்றுலா சென்ற சிறுவர்கள் உள்பட 4 பேர் கடலில் மூழ்கினர்

பால்கருக்கு சுற்றுலா சென்ற சிறுவர்கள் உள்பட 4 பேர் கடலில் மூழ்கினர். இதில் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார்.
பால்கருக்கு சுற்றுலா சென்ற சிறுவர்கள் உள்பட 4 பேர் கடலில் மூழ்கினர்
Published on

வசாய்,

பால்கரில் உள்ள கேல்வே தாத்ரா பாடா கடற்கரைக்கு விடுமுறை தினமான நேற்று ஏராளமானவர்கள் வந்திருந்தனர். நாலச்சோப்ரா சந்தோஷ் பவன் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் உள்பட 7 பேர் சுற்றுலாவிற்காக வந்திருந்தனர். அப்போது கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இருப்பினும் உற்சாக மிகுதியில் அவர்கள் கடலில் இறங்கி குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், கடலில் எழுந்த ராட்சத அலை ஒன்று அங்கு குளித்து கொண்டிருந்த 7 பேரையும் வாரி சுருட்டி உள்ளே இழுத்து சென்றது. இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்றவர்கள் உதவி கேட்டு சத்தம் போட்டனர். உடனடியாக உயிர் காக்கும் வீரர்கள் கடலில் குதித்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கவுரவ் (வயது17), சங்கேத் (17), தேவிதாஸ் (16) ஆகிய மூன்று பேரை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

தீபக் பரசுராம் (20), தீபேஷ் திலிப் (17), ஸ்ரீதேஸ் நாயக் (15), துஷார் ஜிபேட் (15) ஆகிய நான்கு பேர் கடலில் மூழ்கினர். இவர்களில் தீபக் பரசுராம் பிணமாக மீட்கப்பட்டார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 3 பேரையும் தடும் பணி தீவிரமாக நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com