

கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. வெற்றிவேல் கொலை வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் மேலும் 4 பேரை சோமங்கலம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த சுரேந்தர் (வயது 23), ஹரிஹரன் (20), ஹேம்நாத் (23), பிரசாந்த் (23) என்பது தெரியவந்தது. அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.