

கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடியில் ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று அதிகாலை காஞ்சீபுரம் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த தமிழக அரசு பஸ்சை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அந்த பஸ்சில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 3 பேரின் பைகளில் 22 பாக்கெட்டுகளில் மொத்தம் 44 கிலோ எடை கொண்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது.