பொள்ளாச்சி சப்-ஜெயிலில் இருந்து கோவை மத்திய சிறைக்கு 35 கைதிகள் மாற்றம்

பொள்ளாச்சி கிளை சிறையில் இருந்து கோவை மத்திய சிறைக்கு 35 கைதிகள் மாற்றப்பட்டனர்.
பொள்ளாச்சி சப்-ஜெயிலில் இருந்து கோவை மத்திய சிறைக்கு 35 கைதிகள் மாற்றம்
Published on

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி கிளை சிறையில்(சப்-ஜெயில்) 70 கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். இடநெருக்கடி காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் நிலவியது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொள்ளாச்சி கிளை சிறையில் உள்ள கைதிகளை கோவை மத்திய சிறைக்கு மாற்ற சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

35 கைதிகள் மாற்றம்

அதன்படி பொள்ளாச்சி கிளை சிறையில் இருந்து நேற்று 35 கைதிகளை கோவை மத்திய சிறைக்கு வாகனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி, வால்பாறை, பேரூர் சரக போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து, பொள்ளாச்சி கிளை சிறையில் போலீசார் அடைக்கின்றனர். இங்கு 97 கைதிகள் தங்குவதற்கு வசதி உள்ளது. தற்போது 70 கைதிகள் உள்ளனர்.

பாதுகாப்பு

இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியமாகிறது. ஆனால் பொள்ளாச்சி சிறையில் அதற்கு உரிய இடவசதி இல்லை. இதன் காரணமாக அங்கிருந்து 35 கைதிகள் கோவை மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com