ஊட்டியில் இருந்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை திரும்பினார்

ஊட்டியில் இருந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை திரும்பினார்.
ஊட்டியில் இருந்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை திரும்பினார்
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடந்த 16-ந் தேதி ஊட்டிக்கு வந்தார். அவர் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து விட்டு ஊட்டியில் குதிரை பந்தயத்தை பார்வையிட்டார்.

பின்னர் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம், சிங்காரா நீர் மின் உற்பத்தி நிலையம், அவலாஞ்சி, அப்பர்பவானி அணைகள், ஊட்டி படகு இல்லம் போன்ற இடங்களை கண்டு ரசித்தார்.

நேற்று முன்தினம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு சென்று விட்டு, மலை ரெயிலில் பயணித்தார். அன்று மாலை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடந்த மலர் கண்காட்சி நிறைவு விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு சிறந்த மலர் அலங்காரம் மற்றும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளை வழங்கினார். கடந்த 6 நாட்களாக ஊட்டி ராஜ்பவனில் கவர்னர் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஊட்டியில் இருந்து சென்னைக்கு திரும்பினார். அவருக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com