

ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் 2 யூனிட்டுகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி ரூ.60 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 2 யூனிட்டுகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரியில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் கூட்டம் கூடக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் நீலகிரியில் சுற்றுலா தலங்கள் திறப்பது குறித்து அரசிடம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன் பின்னர் தெரிவிக்கப்படும். மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஆனால், கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வருகிறவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற்று வந்தால்தான் அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.