கொள்ளிடம் அருகே கெயில் நிறுவன குழாயை சுத்திகரிக்கும் உருளை பறந்து வயலில் விழுந்ததால் பரபரப்பு

கொள்ளிடம் அருகே கெயில் நிறுவன குழாயை சுத்திகரிக்கும் உருளை பறந்து வந்து வயலில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கொள்ளிடம் அருகே கெயில் நிறுவன குழாயை சுத்திகரிக்கும் உருளை பறந்து வயலில் விழுந்ததால் பரபரப்பு
Published on

கொள்ளிடம்,

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையபாளையத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கிருந்து செம்பனார்கோவில் அருகே உள்ள மேமாத்தூருக்கு கெயில் நிறுவன குழாய் செல்கிறது. இங்கு எடுக்கப்படும் இயற்கை எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இந்த குழாய் வழியாக எடுத்து செல்லப்பட்டு மேமாத்தூரில் அமைய உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்காக மேமாத்தூரிலிருந்து பழையபாளையம் வரை புதியதாக அமைக்கப்பட்டுள்ள குழாயை சுத்தப்படுத்த மேமாத்தூரிலிருந்து உருளை வடிவலான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருள் குழாயில் செலுத்தப்பட்டு, பின்னர் உயர் அழுத்தம் கொண்ட காற்று உள்ளே செலுத்தப்படுகிறது. இதன் மூலம் குழாயின் உட்பகுதியில் உள்ள துரு மற்றும் மண் உள்ளிட்ட கழிவுகள் வெளியே வரும்.

பரபரப்பு

இதன்படி நேற்று குழாயை சுத்தம் செய்ய இந்த உருளை வடிவ பொருளை உள்ளே புகுத்தி உயர் அழுத்தத்தில் காற்று உள்ளே செலுத்தப்பட்டது. அப்போது குழாயில் இருந்து கழிவுகளை வெளியே தள்ளிக்கொண்டு வந்த அந்த உருளை திடீரென குழாயில் இருந்து வெளியே வந்து சுமார் 30 மீட்டர் உயரம் பறந்து அருகே உள்ள வயலில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் வயலுக்கு வந்து சம்பந்தப்பட்ட உருளையை பார்த்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com