

பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே உள்ள ஞாயிறு கிராமத்தில் தமிழக அரசின் நெல் கொள்முதல் கிடங்கு உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன் 6 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த வடமாநிலத்தை சேர்ந்த ராம்பாலாக்மைண்ட் (வயது 30) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.15 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் ஞாயிறு கிராமத்தை சேர்ந்த முகேஷ் (25), சூர்யா (22), சாரதி (23), கருப்பு (21), விக்கி (24) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய அன்பரசை தேடி வருகின்றனர்.